ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனால் அதற்காக தான் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்பே தெரிந்திருந்தால் அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டிருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.