எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர
உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை