ரிஷாட்டின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தமை உறுதி- ஜாலிய சேனாரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரனான மொஹமட் ரியாஜ்  நேரடி தொடர்பு வைத்திருந்தாரென பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணையின்போதே இந்த விடயங்கள் உறுதிசெய்யப்பட்டதாக  ஜாலிய சேனரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிஷாட்டின் சகோதரனான குறித்த சந்தேகநபர், குண்டுதாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளமையும் விசாரணையின் ஊடாக தமக்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குற்றஞ்மத்தப்பட்டுள்ள சந்தேகநபரான மொஹமட் ரியாஜ், தற்போது கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.