இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.