கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
வட கொழும்பில் இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சுகாதார முறைமைக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும், தேர்தல் ஒத்திகையை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தி வருகின்றது.
அதற்கமையவே கொழும்பில் இன்றைய தினம் தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல், கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை