கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்று உறுதியானவர்களில் இதுவரை 1472 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது 467 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை