ஆயிரக்கணக்கான படையினரை கொலை செய்தேன்: கருணாவின் கருத்திற்கு ருவான் எதிர்ப்பு
ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ருவான் விஜயவர்த்தன, தனது ருவிட்டர் பதிவிலேயே கருணாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரசினை விட தான்ஆபத்தானவன். ஆனையிறவில் 2000 முதல் 3000 படையினரையும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் கொலை செய்தேன் என கருணா தெரிவித்துள்ளார்.
அதாவது ராஜபக்ஷ, தேசியவாதமும் தேசப்பற்றும் பேசும் நிலையில், கிழக்கில் அவர்களுடைய நபர் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலை செய்தேன் என தெரிவிக்கின்றார்” என குறித்த ருவிட்டர் பதிவில் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை