சூரிய கிரகணம் இன்று: பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா மேலும்  கூறியுள்ளதாவது, “இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 10.24 மணிக்கு இலங்கையில் ஆரம்பமாவதோடு இதனை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 11.54 மணிக்கும் கொழும்பில் முற்பகல் 11.51 மணிக்கும் அவதானிக்க முடியும்.

அத்துடன் சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்குப் பொருத்தமான இலக்கம் 14 என்ற விசேட கண்ணாடி, சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான விசேட கண்ணாடி என்பவை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மக்களுக்கு, அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமெனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பிரதேசத்தில் 24 வீதமும் கொழும்பு பிரதேசத்தில் 16 வீதமும் தென்படும் என சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.