மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்தன.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை