கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பத்மநாபாவின் நினைவஞ்சலி நிகழ்வின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் நந்திக்கடல், கேப்பாப்புலவு உள்ளிட்ட பல பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. தற்போதும் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் கவலையான விடயம் என்னவென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் – மைத்திரி அரசாங்கம் பங்காளியாக இருந்த காலத்திலேயே காணி சுவீகரிப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளன என அவர் குற்றம் சாட்டினார்.
கருத்துக்களேதுமில்லை