கடந்த காலத்தை விடவும் அதிக ஆசனம் இம்முறை தமிழ்க் கூட்டமைப்பு பெறும்! மாவை சேனாதிராசா உறுதியான நம்பிக்கை
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் எந்த அரசாங்கம் அமையப்போகின்றது என்று தெரியாது. எனினும் எந்த அரசாங்கம் ஆட்சியமைகின்றது என்று பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர். அந்தவகையில் எமது செயற்பாடுகள் தொடர்பாக ஆதாரபூர்வமான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை