3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதிஅமைச்சராகவும் பதவி வகித்தவர்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா, ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததால் கொரோனா வைரஸினை விட ஆபத்தானவன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் 3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா?
எனவே இவ்விடயங்கள் குறித்த தமது நிலைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் பௌத்தமத தலைவர்களும் இவ்விடயங்கள் தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை