கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26பேர் மீண்டனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 26 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் நாட்டில் 1950பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை