அம்பாறையில் பாரிய இரண்டு மீன்கள் கரையொதுங்கி உள்ளன

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கின.

இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி- 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர், கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அம்பாறை மருதமுனை – பெரியநீலாவணை கடற்கரையில் இன்று இராட்சத சுறாமீன் பிடிபட்டுள்ளது.

சுமார் 20 அடி, 1500 கிலோவிற்கு அதிகமாக, இந்த இராட்சத சுறாமீன்  இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர் .

கரைவலை மீனவர்களது  வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர்.

அரிய வகை புள்ளி சுறாமீன், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.