வவுனியாவில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் தொடர்பான கூட்டம்!
தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள், அதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையக உறுப்பினர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் அலுவலகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை