இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளன.

எனினும் பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டையைப் பெறும் ஒருநாள் சேவையும் இன்று முதல் ஆரம்பமாகின்றது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி தேசிய அடையாள அட்டையைப் பெறும் ஒருநாள் சேவை கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.