பளையில் சி-4 வெடிமருந்து மீட்பு: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு
யாழ்ப்பாணம்- பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
பளை பகுதியிலுள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள், அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால், குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சோதனையிட்டனர். அப்போது குறித்த மூட்டைக்குள் இருந்து இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை