18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு- அரச அச்சகர்

நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும்  இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள்,  அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளில் காட்சிப்படுத்தப்படும் பத்திரங்களை அச்சிட்டு முடிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று நள்ளிரவு, வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்த்தல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய தயாரிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிப்பதற்கு, பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.