இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம்!

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களை தனக்கு தடுக்க அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் ஒளி, ஒலிபரப்பாகும் செய்திகளில் வேட்பாளர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குமாறும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.