பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது: STF தொடர் விசாரணை
பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களைத் தேடி இராணுவத்தின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப் ) இன்று (திங்கட்கிழமை) விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களை ஹங்வெல்ல- எம்புல்கம பகுதியில் வைத்து எஸ்.டி.எஃப்.பினர் இன்று கைது செய்துள்ளனர்.
அத்துடன் இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து போலி கைத்துப்பாக்கிகள், மூன்று வாள், ஒரு கத்தி மற்றும் 325 கிராம் கேரள கஞ்சா ஆகியவைகளை அவர்கள் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை கைது செய்த எஸ்.டி.எஃப்.பினர், ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் இராணுவத்தினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை