எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேரதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மூன்று ஆசனங்களைப் பெறுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளக்கூடிய  வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில்  எஞ்சியுள்ள ஐந்தாவது ஆசனத்துக்கே தற்போது போட்டி நிலவுகின்றது. குறித்த போட்டி எனக்கும், அமீர் அலி, பிள்ளையான், ஆகிய மூன்று பேருக்கும்தான் நிலவுகிறது.

எனினும் இப்போட்டியில் நான் நிச்சயமாக வெற்றியடைவேன்.  ஏனென்றால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடியில் பதினெட்டாயிரத்து ஐந்நூறு வாக்குகள்  கிடைத்தது.

மேலும், காத்தான்குடி பகுதியில்  எனக்கு வாக்குகள் கூடியுள்ளது. எனவே காத்தான்குடியில் மாத்திரம் இருபத்தி இரண்டாயிரம் வாக்குகளை நான் பெற்றுக்கொள்வேன்.

அந்தவகையில் ஏறாவூர், கல்குடா ஆகிய இடங்களில் எனக்கு வாக்குகள் உள்ளது. எனவே இருபத்தி எட்டாயிரம் வாக்குகளை பெறுவது என்பது எனக்கு பெரியவிடயமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.