யாழில் வாள்வெட்டு: இருவர் காயம் – ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மரணச்சடங்கில், இரு தரப்புக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது வாள் வெட்டுத் தாக்குதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள கோப்பாய் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை