சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி

பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாம் சுகாதார அமைச்சுக்கு கவலை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.