கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் விசேட விமானத்தின் ஊடாக இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூசிலாந்து மற்றும் இந்தியாவிலும் சிக்கியுள்ள மேலும் சிலர் இன்று நாடு திரும்பவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை