கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்ளாது தலை சிறந்த தலைமையின்  கீழ் பயணித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காத்துக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.