மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை வளாகத்தில் குறித்த நினைவுதினம் அனுஷ்டிப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மறைந்த மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை