கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
09 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 820 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 602 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை