பூசா சிறைச்சாலையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல், 15க்கு மேற்பட்ட கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள்  ஒவ்வொரு நாளும், 2 மணித்தியாலங்கள் சிறையில் இருந்து வெளியே வந்து உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், வெளியே செல்லும் நேரத்தை அதிகரிக்குமாறு கோரி, குறித்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாதபடி  தங்களை அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால், இவர்களின் கோரிக்கையை ஏற்க சிறை நிருவாகம் மறுத்து வருகின்றது.

பூசா சிறைச்சாலையில் கஞ்சிப்பான இம்ரான் உள்ளிட்ட பல மோசமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.