நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க

எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரசார கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக ஊடகங்களில் பிரச்சாரப் போரைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் எங்களை எந்ததொரு நடவடிக்கைகளாலும் தடுக்க முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே நீங்கள் எங்களை தோற்கடிக்க விரும்பினால், நாட்டை திறமையாகவும், நேர்மையாகவும், ஊழல் இல்லாமலும் ஆட்சி செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.