எதிர்வரும் காலத்திலும் மஹிந்ததான் பிரதமர்- பிரசன்ன
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் ஜனாதிபதியாக வேண்டுமென்ற கனவு கலைந்ததைப் போன்று பிரதமராகும் கனவும் மிக விரைவில் கலைந்து போய்விடும்.
அத்துடன், அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் ஒருபோதும் அதனை நம்பமாட்டார்கள்.
மேலும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப கோட்டாபய மற்றும் மஹிந்தவினால் மாத்திரமே முடியும்.
எனவே மக்கள் நிச்சயம் எங்களுக்கே ஆதரவு வழங்குவார்கள். இதனால் தேர்தலுக்கு பின்னரும் மஹிந்ததான் நாட்டின் பிரதமராக இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை