கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  நிலையில், 380 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,619 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 36 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.