கருணாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் – லக்ஷமன்
போரின்போது இரண்டு, மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும் என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கருணா அம்மான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஏனெனில் இதுபோன்ற கொலைகள் நடந்ததாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் கூறினார்.
எனேவ கருணா அம்மான் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லக்ஷமன் கிரியெல்ல அழைப்பு விடுத்தார்.
குற்றவாளி ஒருவர் தான் இந்தக் குற்றத்தைச் செய்ததை ஏற்றுக்கொண்ட நிலையில் விசாரணைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தரணியை மேற்கோளிட்டு கிரியெல்ல குறிப்பிட்டார்.
எனவே அவரது சமீபத்தில் கருத்துக்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்றும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை