எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை
எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேதவத்த விகாரையின் மத நிகழ்வுகளில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தூதரகம், நாங்கள் கூறிய விடயத்துக்கு இன்னும் கடன்தொகை கிடைக்கவில்லை என்கின்றது.
அதாவது உண்மையாக கடன்தொகை கிடைத்து இருந்தால்தான் மோசடி இடம்பெற்று இருந்ததாக சரி அவர்கள் கூற முடியும்.
ஆனால் எங்களுக்கு எதிராக இவ்விடயம் தொடர்பாக எந்ததொரு உறுதியான ஆதாரங்கள் இன்றி நாடளாவிய ரீதியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே, நாங்கள் அனைவரும் கேட்க விரும்புவது, எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க போகின்றதா அல்லது இல்லையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் இந்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தற்போதைய அரசாங்கம் என்ன கூறியுள்ளது என்பதை மாத்திரமே தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை