தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை- சுமந்திரன்
தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு கடுமையாக உழைத்திருக்கின்றோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், எமது உரிமைகள் வென்றெடுக்கப்படுவதோடு வடக்கு கிழக்கு இணைந்த பொருளாதாரக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், வே .தபேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
இப்பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை