மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு
மட்டக்களப்பு – கழுதாவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தகராறு இடம்பெற்று வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் அவரது வீட்டிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ முருகன் கோயில் வீதியில் வசிக்கும் 33 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான லஸ்காந்த துர்கா எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை