எம்.சி.சி. மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்க மாட்டோம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்
எம்.சி.சி. உடன்படிக்கை மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்கப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எம்.சி.சி. உடன்படிக்கை கடந்த அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அரசு சார்பில் எதிர்மறையான பிரசாரங்கள் தற்போது முன்வைக்கப்பட்டாலும் அதற்கு அரசாங்கமும் ஆதரவளித்துள்ளது.
எம்.சி.சி. உடன்படிக்கை இலங்கைக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு உடன்படிக்கை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில், எம்.சி.சி. உடன்படிக்கை மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு பின்நிற்காது. அதரவு வழங்குவதென்பது அரசாங்கத்துக்கு பங்காளியாகச் செல்வது அல்ல.
அதேநேரம் அந்த உடன்படிக்கை மக்களுக்கு நன்மை தராதுவிடத்து அதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்றில் ஆதரவு வழங்காது” என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை