சம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது ஆசனத்தினை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஐ.முருகன் தெரிவித்துள்ளார்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக சந்திப்பு, திருகோணமலை கட்சிக் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதன்போது குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஐ.முருகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்கில் எமது கட்சி, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.
குறித்த இரு மாவட்டத்திலும் தங்கராசா புஸ்பராசா எனும் பெயரிலில் இருவர் போட்டியிடுகின்றனர்.
அதாவது, 1968இல் பிறந்த ஒருவர் அம்பாறையிலும் 1965இல் பிறந்த ஒருவர் திருகோணமலையிலும் ஆக ஒரே பெயருடைய இருவர் இம்முறை போட்டியிடுகின்றனர்.
இந்த விடயத்தினை சிலர் புரிந்துகொள்ளாமல் ஈ.பி.டீ.பி ஆள் மாராட்டம் செய்கின்றது என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை கைப்பற்றுமென இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த காலத்தில் அவர்கள் செயற்பட்ட விதம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமையினால், இம்முறை தேர்தலில், சம்பந்தன் கூட தனது ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை