கொரோனா வைரஸிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் கடற்படை சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கடற்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது என கடற்படை பேச்சாளர் லெப்டிணன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2033 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 361 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை