ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் வசந்த கரன்னாகொட
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் கடந்தப்பட்டமை தொடர்பாக, வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தன்னை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வசந்த கரன்னாகொட முறையிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை