க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17ஆம்  திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர் 2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, பரீட்சைப் பெறுபேறுகளை கடந்த மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.