பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்தபோது படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவர் என்றும் சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர், இதுவரை, நாங்கள் 23 சடலங்களை மீட்டுள்ளோம், காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றோம் என கூறியுள்ளார்.

விரிவான உள்நாட்டு நீர்வழிகளைக் கொண்ட ஒரு தாழ்வான நாடான பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படகு விபத்துக்களில் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.