முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வீரவன்னியராஜா கோரிக்கை…

பிற்படுத்தப்பட்ட பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பிரமுகருமான வீரவன்னியராஜா நெய்வேலி வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை   நேரில் சந்தித்து  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையம், சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த, இன்கோசர்வ் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 25 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் விரைவில் முடித்திட வேண்டும்.

நிரந்தர தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இழப்பான 6 நாள் சம்பளம்,  நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்திற்கு வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திரா நகர் பகுதியில் மாற்று மனை வழங்கியுள்ளது. இம்மனைகளுக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் நீண்ட நாளாக கோரிக்கை வைக்கப்படுகின்ற ஐடிஐ அப்பரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலை, பணியில் இருந்த போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். புதிய மின் திட்ட, சுரங்க விரிவாக்க பணிகளில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

புதியதாக அனல்மின்நிலையம், சுரங்க விரிவாக்கப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, நல்ல அவர்களது எதிர்கால வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிக்கும் வகையில் அனைவருக்கும் வேலை,  ஓர் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெய்வேலியில் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்று வருவதால், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு 5 செண்ட் நிலம் வழங்க வேண்டும். இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு கல்வி்க்கு ஏற்ற வேலையை என்எல்சி நிறுவனம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் சாய்.சுரேஷ் தந்தை மாரிமுத்து அவர்களின் படத்தை திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினார். உடன் முன்னாள் எம்.பி.டாக்டர்.எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், இந்து முன்னணி ஆலய மறுமலர்ச்சி குழு மாவட்ட தவபாலன், பாஜக நிர்வாகிகள் சுகுமாரன், விஜயரங்கன், சரவணசுந்தரம், இளஞ்செழியன், நகர தலைவர் ரமேஷ், பிஎம்எஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜகோபால், முருகன், வீடு, நிலம் கொடுத்த சங்கங்கத்தின் நிர்வாகிகள் ஜான், பரமசிவம்,  அகில இந்திய வன்னியசேனா அமைப்பின் செயலாளர் டெல்டா விஜயன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:   நெய்வேலி வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, பாஜக பிரமுகர்

              வீரவன்னியராஜா சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுவை வழங்கினார். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.