தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பிரபல சட்டத்தரனி திருமதி மணோன்மணி சதாசிவம், சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“சுமந்திரனுக்கு எதிராக பிரபல பெண் சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு” என்ற தலைப்போது சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தமிழ்வின் இணையதளம் பிரசுரித்துள்ளது. இந்த இணைய தளத்தை ஐபிசி விலைக்கு வாங்கியுள்ளது.
திருமதி மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமந்திரன் ஏன் பதவி விலகவேண்டும் என்ற தனது நியாயப்பாட்டை திருமதி. மனோன்மணி சதாசிவம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:
இப்போது அதே கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து மனோன்மணி வெளியிட்டுள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட சில வாசகங்களை தமிழில் வசதியாக மறைத்துவிட்டார். எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில்,
We, the Tamils of Tamil Eelam, have been constantly betrayed by the traitors in our own community. We have no tolerance and cannot suffer from these disloyal actions any longer. We call the former MP, Mr M. A. Sumanthiran, the spokesperson of the Tamil National Alliance (TNA), to respect the people’s mandate and resign from his post and leave the TNA forthwith. We call him to do so immediately if he has any dignity at all. Should he fail to do of his own accord, we hereby demand the TNA leadership to honour the wishes of the people and remove him.
தமிழீழத்தின் தமிழர்கள் ஆகிய நாங்கள், எங்கள் சொந்த சமூகத்தில் உள்ள துரோகிகளால் தொடர்ந்து துரோகம் செய்யப்படுகிறோம். எங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, இந்த விசுவாசமற்ற செயல்களால் இனியும் பாதிக்கப்பட முடியாது. முன்னாள் எம்.பி., தமிழ் தேசிய கூட்டணியின் (ததேகூ) ஊடகப் பேச்சாளர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால் உடனடியாக ததேகூ இல் இருந்து விலகுமாறு அழைக்கிறோம். அவர் தனது விருப்பப்படி செய்யத் தவறினால், மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து அவரை உடனடியா நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நாங்கள் இதன்மூலம் கோருகிறோம்.
இந்த வரிகள் பன்மையில் அமைந்திருக்கிறது. இவர் குறிப்பிடும் ஈழத்தமிழர்கள் யார்? அவர்களை இவர் பிரதிநித்துவப்படுத்துகிறாரா? நாங்கள் அறிந்த அளவில் இவர் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூடக் கிடையாது. பின் எதற்காக இந்தப் பம்மாத்துப் பேச்சு? யாரை ஏமாற்ற நினைக்கிறார்.
அம்மணி மனோன்மணி ஆங்கிலத்தில் எழுதிய இந்த வாசகத்தை தமிழில் மொழிபெயர்க்கும் போது வசதியாக விட்டுவிட்டார். மனோன்மணி தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்று சொல்கிறார். அப்படியென்றால் அவர் 6 ஆவது சட்ட திருத்தத்தின்படி இலங்கையின் ஒற்றையாட்சிக்கு விசுவாசகமாக இருப்போன் என்றும் தனிநாடு கேட்க மாட்டேன் என்றும் சத்தியப் பிரமாணம் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்துவிட்டு எப்படி “தமிழீழத்தின் தமிழர்கள் ஆகிய நாங்கள்” என எப்படிப் பிரிவினைவாதம் பேசலாம். அதிலும் நீதிமன்றங்களில் தோன்றி வாதாடும் ஒரு சட்டத்தரணி, பதில் நீதவான் எப்படிச் சொல்ல முடியும்? எழுத முடியும்?
அம்மணி மனேன்மணிக்கு அப்படி எழுதுவதால் வரும் விளைவு தெரிந்திருக்க வேண்டும். அதன்காரணமாக ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட வரிகள் தமிழில் விடுபட்டுப் போயிருக்கிறது! துணிச்சல் இருந்தால் தமிழிலும் அப்படி எழுதியிருக்கலாமே? ஏன் எழுதவில்லை?
ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும், சொந்த இனத்தயையே சேரந்த துரோகிகளால்தொடர்ந்தும்துரோகத்துககு உளள்ளாகிறோம். நாங்கள் இந்த துரோகிகளின் ஈனத்தனமான செயல்களால் இனியும் தொடர்ந்து பாதிக்கப்பட முடியாது. 2009 வரை தமிழீழத்தில் இடம்பெற்ற மாபெரும் தியாகங்களுக்கு பின்னரும் இடம்பெறும் இந்ந துரோக செயல்களின் தொடர்ச்சியினால் எங்களுடைய சகிப்புத்தன்மை எல்லை கடந்து விட்டது.
ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் தனது சொந்த கருத்தை தவிர்த்து, மக்களின் குரலாக, மக்களின் கருத்தை பொது அரங்குகளில் தெரிவிக்கும் பக்குவம் உடையவராக இருக்க வேண்டும். முனன் hள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான திரு சுமந்திரன் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழர்களாகிய எங்கள் மனங்களை நோகடிக்கும் விதமாக அமைகின்றன.
அவரிடத்தில் கொஞ்சமாவது கண்ணியம் எஞ்சிஇருந்தால்,அவர்உடனடியாக தானாக முன்வந்து பதவி விலகவேண்டும். அவர்தனது சொந்த விருப்பப்படி அதை செய்யத் தவறினால், தமிழ் மக்களாகிய எங்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கிவேண்டும்.
மக்களாகிய நாங்கள் திரு சுமந்திரனின் கருத்துச் சுதந்திரத்தையும் அவர் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் மதிக்கும் அதேவேளை, அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கபட்ட நோக்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தனது சொந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த அவர்அனுமதிக்கப்படக்கூடாது என்பதை நாம்தெளிவாகக்கூற விரும்புகிறோம்.
அம்மணி மனோன்மணி தனது கட்டுரையில் “மக்களாகிய நாங்கள்” எனச் சொல்கிறார். அந்த மக்கள் யார்? ஒரு சனநாயக நாட்டில் மக்கள் சார்பாகப் பேசக் கூடியவர்கள் பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர்களது ஆதரவைப் பெற்ற கட்சித் தலைவர்கள்தான். மற்றவர்கள் கருத்துச் சொல்லலாம். ஆனால் மக்கள் சார்பாக கருத்துச் சொல்ல முடியாது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வட கிழக்கில் போட்டியிட்டு மொத்தம் 515,963 வாக்குகள் பெற்று 14 இடங்களைக் கைப்பற்றியது. முதல் முதல் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் 58,044 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ் வாக்காளர்கள் கடந்த தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தார்கள்? ததேகூ தனது தேர்தல் அறிக்கையில் கூறியவற்ளை வைத்துத்தான் வாக்களித்திருந்தார்கள். அந்த தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?
தமிழ் மக்கள் ஒரு தனித் தேசிய இனம், வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தாம் கோருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கூறியது.
அதிகாரப் பகிர்வு என்பது காணி, சட்டம் – ஒழுங்கு, சட்ட அமலாக்கம், தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் ததேகூ எவற்றை தேர்தல் அறிக்கைகளில் சொல்லியதோ அதற்கு இணங்கவே, அதற்கு அமையவே பேசிவருகிறார். நேர்படப் பேசுகிறார். வடக்கில் ஒருவிதமாகவும் தெற்கில் இன்னொரு விதமாகவும் சுமந்திரன் பேசுவதில்லை.
சமஷ்டி அரசியல் அமைப்பு
அவரிடம் துணிவு இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சுதந்திரமான ஒரு கட்சியை அமைத்து, தமதுசொந்த கருத்தை தாராளமாக போதித்து வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் குளிர்காய்வதை நிறுத்த வேணிடும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறு என்பது எப்போதும் விடுதலைப் புலிகளுடன் பின்னி பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, விடுதலைப் புலிகளின் முயற்சியில் 2001 ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்ஆகிய கடச்pகளுடன்புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து உருவாக்கபட்டது.
அப்போதைய TULF பொதுச்செயலாளர் திரு S சம்பந்தன, “ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு (புலிகள்) முழு அரசியல் ஆதரவையும் அளிக்க வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் ஒரே பதாதையின் கீழ் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்து விட்டது” என்று அறிவித்திருந்தார்.
2006 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடட் அறிக்கை ஒன்றில்; ‘இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடையே புலிகளுக்கு கிடைத்த பெரும் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகளாக நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் ஆணையையே மக்கள் தேர்தல் மூலமாகவும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததனூடாகவும் நிரூபித்துளள் னர்” என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில,; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்தில், வடகிழக்கில் உளள் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததாகவும், புலிகள் தலைவரான திரு வேலுப்பிளi; ள பிரபாகரனின் கொள்கைகளை மக்கள் இன்றும் ஆதரிப்பதாகவும், அடங்கிக்கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பிய பிரபாகரன் தமிழர் வரலாற்றில் சிறந்த தலைவர் எனவும் தெரிவித்தார்.
“புலிகளின் பங்களிப்புடன் எங்கள் மக்களின் சக்தியாக உருவான தமிழ் தேசிய கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” என்று 2019 ஆம் ஆண்டில் டெலோ தலைவர் திரு செல்வம் அடைகக்லநாதன்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைஉருவாக்குவதில்புலிகளின்பங்களிப்பு குறித்து பேசிய போது தெரிவித்திருந்தார்.
2010 இல் திரு சுமந்திரன் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் தேசிய பட்டியல் மூலமாகதான் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராகினார். கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியோ அல்லது அதன் ஆரம்பகால வரலாற்றைப் பற்றயோ அறிந்திருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்ளும் நாங்கள்அவரைஅவ்வரலாற்றைஎங்காவதுதேடிக்கற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.
திரு சுமந்திரன் உண்மையில் ஒரு மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துளள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துக்காக வழக்காடும் ஒருசராசரி அப்புக்காத்தாகவே வாழ்ந்துளள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை.
அம்மணி மனோன்மணி “அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துகக்hகவழக்காடும்ஒருசராசரிஅப்புக்காத்தாகவே வாழ்ந்துள்ளார்.வடக்குமற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை” என மிகக் கேவலமாக, அருவருப்பான முறையில், எந்தக் கூச்சமும் இன்றி சுமந்திரன் பற்றி எழுதுகிறார். சிலருக்கு தங்களைப் போல் மற்றவர்களை நினைக்கும் ‘பெருந்தன்மை’ உண்டு. உண்மையில் சுமந்திரன் ஒரு சராசரி அப்புக்காத்தா அல்லது அம்மணி மனோன்மணி ஒரு சராசரி அப்புக்காத்தா?
அம்மணி மனோன்மணி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் சுமந்திரன் வியாபார வழக்குகள் பேசுகிற அப்புக்காத்து என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதியுள்ளார்.
Mr Sumanthiran has repeatedly proven on many occasions that he is neither a real human rights lawyer nor a genuine people’s representative. There is no evidence that he ever studied human right law or international law in any university. There is no record of him representing any political prisoners or being involved in any public interest cases. In fact, he always remained a money-minded commercial lawyer based in Colombo and never cared about the lives of the Tamils in the North and East.
திரு சுமந்திரன் ஒரு உண்மையான மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் பலமுறை நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமை சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதாக எந்தப் பதிவும் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்ட பணத்தாசை பிடித்த வணிக வழக்கறிஞராக இருந்தார், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை.
இது அழுக்காறு, சின்னத்தனம் காரணமாக எழுதப்பட்டதாகும். தலை சுகம் இல்லாதவர்களே சுமந்திரன் “பணத்தாசை பிடித்த வணிக வழக்கறிஞர்” இப்படி எழுதுவார்கள். சுமந்திரனது அரசியல் பற்றி விமர்சனம் வைக்கலாம். அதில் தப்பில்லை. ஆனால் அவர் ஒரு சராசரி அப்புக்காத்து என்று எழுதுவது கண்டனத்துக்கு உரியது. இது அம்மணி மனோன்மணியின் குடிப்பிறப்பு, பண்பாடு பற்றிய ஐயத்தை தோற்றுவிக்கிறது.
கன்னியா பிள்ளையார் கோயில் சம்பந்தமான வழக்கை சுமந்திரன்தான் தாக்கல் செய்துள்ளார். திருக்கேதீச்சுவரம் வளைவு அப்புறப்படுத்தப்பட்ட வழக்கில் திருக்கேதீசுவரம் கோயில் அறக்கட்டளை சார்பாக சுமந்திரனே வழக்காடுகிறார்.
2007 ஆம் ஆண்டு யூன் 7 ஆம் நாள் அதிகாலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சுமந்திரனே தோன்றி வாதாடினார். தமிழர்கள் கொழும்பினுள் வருவதைத் தடுக்க முடியாது என்று உயர் நீதி மன்று உத்தரவிட்டது.
1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்து 8,38.5 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்திருந்தது. இதனால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிராக 2,000 க்கும் அதிகமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தல் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவை சேனாதிராசா அவர்களும் ஒருவர். உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கிய போதிலும் அதனை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு மறுத்துவிட்டது. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 60 விழுக்காடான காணி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சுமந்திரனே வாதாடியிருந்தார்.
அண்மையில் முன்னாள் நா.உறுப்பினரும் நடிகருமான இரஞ்சன் இராமநாயக்க பொலீசாரால் கைது செய்யப்பட்டார். ஊரடங்குச் சட்டத்தை மீறினார். பொலீசார் தமது கடமைகளை செய்யவிடாது தடுத்தார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். இந்த வழக்கில் ஊதியம் வாங்காது நீதிமன்றத்தில் வாதாடி இரஞ்சன் இராமநாயக்காவுக்கு பிணை வாங்கிக் கொடுத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் அன்றைய சனாதிபதி சிறிசேனாவால் கலைக்கப்பட்டதை அடுத்து அதற்கு எதிராக சம்பந்தன் ஐயா உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்காக வாதாடியவர் சுமந்திரன். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் யாப்புக்கு முரணானது என்ற சுமந்திரனின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தது.
இவையெல்லாம் போகட்டும் சுமந்திரனைப் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது?
Sumanthiran was called to the bar in 1991. He then started practising law in Colombo, appearing in civil litigation cases in the supreme court, court of appeal, commercial high court and district courts. His successful cases include the privatisation of Sri Lanka Insurance Corporation, privatisation of Lanka Marine Services and the closure of Pramuka Bank. He has appeared in a number of fundamental rights cases and judicial reviews of parliamentary legislation and executive action including the charging of levy for water and establishing a revenue authority. He prevented the forced expulsion of Tamils from Colombo and successfully challenged an anti-conversion bill which the courts struck down as being unconstitutional. He has also appeared for petitioners against the proposed 18th and 19th amendments to the constitution which were found to be unconstitutional and required two-thirds majority in Parliament and a referendum. He has worked on a number of public interest cases including the ongoing attempt by residents of the Valikamam North High Security Zone to get their land back from the Sri Lankan military. His human rights work has led to him being threatened, harassed and branded “traitors in black coats” by the Sri Lankan military under the then President’s brother Gotabhaya Rajapaksa.
Sumanthiran has become one of Sri Lanka’s top human rights and constitutional lawyers. He received an LLM degree in internet and electronic law from Monash University in 2001. He was made a President’s Counsel in 2017.
1991 ஆம் ஆண்டில் சுமந்திரன் சட்டத்தரணியாக தொழில் செய்ய அழைக்கப்பட்டார். பின்னர் அவர் கொழும்பில் சட்டத் தொழில் செய்யத் தொடங்கினார், உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், வணிக உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளில் தோன்றினார். இலங்கை காப்பீட்டுக் கழகத்தின் தனியார்மயமாக்கல், லங்கா கடல் சேவைகளை தனியார் மயமாக்குதல் மற்றும் பிரமுகா வங்கியை மூடுவது ஆகியவை அவரது வெற்றிகரமான வழக்குகளில் அடங்கும். பல அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் நாடாளுமன்ற சட்டங்கள் மற்றும் நிறைவேற்று நடவடிக்கை ஆகியவற்றின் நீதித்துறை மதிப்புரைகளில் அவர் தண்ணீருக்கு வரி வசூலித்தல் மற்றும் வருவாய் அதிகாரத்தை நிறுவுதல் உள்ளிட்டவற்றில் தோன்றினார். கொழும்பிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றுவதை அவர் தடுத்தார். மதமாற்றத்திற்கு எதிரான மசோதாவை வெற்றிகரமாக வினையாற்றினார், இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. அரசியலமைப்பிற்கு முன்மொழியப்பட்ட 18 மற்றும் 19 வது திருத்தங்களுக்கு எதிராக மனுதாரர்களுக்காக அவர் தோன்றினார், அவை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை என்றும் அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு தேவை என்றும் கண்டறியப்பட்டது. வாலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு மண்டலத்தில் வசிப்பவர்கள் இலங்கை இராணுவத்திடமிருந்து தங்கள் நிலங்களை திரும்பப் பெற தொடர்ந்து மேற்கொண்டுள்ள முயற்சிகள் உட்பட பல பொது நல வழக்குகளில் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மனித உரிமைப் பணிகள், அப்போதைய ஜனாதிபதியின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, “கறுப்பு கோட்டுகளில் துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டன.
சுமந்திரன் இலங்கையின் உயர்மட்ட மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் 2001 இல் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இணையம் மற்றும் மின்னணு சட்டத்தில் எல்.எல்.எம் பட்டம் பெற்றார். அவர் 2017 இல் ஜனாதிபதி சட்டத்தரணியா நியமிக்கப்பட்டார்.
ஒரு வழக்கறிஞருக்கு உரிய அடிப்படை ஒழுக்க விதிமுறைகளை கூட திரு சுமந்திரன் என்றும் பின்பற்றியதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக 2006 இல் வடக்கு கிழக்கை இலங்கை அரசு பிரித்ததை எதிர்த்து டெலோ சார்ப்பாக தொடரப்பட்ட வழக்;கில் சட்டவாளராக நியமிக்கப்பட்ட, அந்த வழக்கை மனுதாரர்களின் அனுமதியின்றியே மீள பெற்றுக்கொண்டார். இது பாரதூரமான குற்றம் மட்டுமன்றி, அவர் ஒரு சட்டத்தணியாக கடமையாற்ற தகுதியற்றவர் என்பதையும் நிருபிக்கிறது.
ஒரு வழக்கறிஞர்; தனக்கு பரிச்சயம் இல்லாத துறையில் தன்னை நிபுணர் என பாசாங்கு செய்வதும், எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் சட்ட ஆலோசனைகளை வழங்க முயற்சிப்பதும் கீழ்தரமான ஒரு தொழில்சார்ந்த தந்திரமாகும். இவ்வாறாகவே, திரு சுமந்திரன் தன்னை ஒரு மனித உரிமை வழக்கறிஞராகக் காட்டி, சர்வதேச சட்டம் தொடர்பான வி;டயங்களில் தவறான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் கேவலமான செயலை செய்து வருகிறார்.
எடுத்துகக்hட்டாக,வடக்கில்இருந்துமுஸ்லிம்கள்வெளியேற்றப்பட்ட25வதுஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில் 2015 நவம்பரில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு சுமந்திரன் நுஓPசுநுளுளு செய்தித்தாள் ஊடகவியலாளரிடம் ~~1990களில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை கட்டாயமாக வெளியேற்றியது ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கை ( நுவாhniஉ ஊடநயளெiபெ)” என்று தெரிவித்தது மட்டுமன்றி, அதை தமிழர்கள் காலம் காலமாக அனுபவித்துவரும் இனப்படுகொலையுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார்.
அவரதுஇந்தகருத்து,அவர்சரவ்தேசசட்டம்பற்றிஅறியாதவர்மட்டுமல்லஅவருக்குவரலாறு குறித்தஅறிவும்மிகககு;றைவாகஉளள்துஎன்பதையும்சந்தேகத்திற்குஅப்பால்நிருபிக்கிறது. முதலாவதாக, திரு சுமந்திரன், இன சுத்திகரிப்பு என்பதன் சட்டரீதியான வரைவிலக்கணத்தை அவர புரிந்து கொளள் வேண்டும். இரண்டாவதாக, இன சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கான வித்தியாசத்தை கற்றுக் கொளள் வேண்டும்.
யூகோசிலாவியாவில்;நடைபெற்றசரவ்தேசமனிதஉரிமைமீறல்களைவிசாரிக்கஅமைக்கபட்ட ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஆணையம், அதன் இடைக்கால அறிக்கையில் (ளுஃ25274)
இனச்சுத்திகரிப்பு என்றால் ~~மரபுவழியாக வாழ்ந்த இடத்திலிருந்து ஒரு இன மக்களை பலத்தை பயன்படுத்தி கடட் hயமாக வெளியேற்றுதல் ” என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கையில் (ளுஃ1994ஃ674;) ~~ஏதாவது ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை சேர்ந்தவர்களால், இன்னொரு இனத்தை அல்லது மதத்தை சேரந் ;த மக்களை, குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் இருந்து, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிகi; ககள் மூலம் நிரந்தரமாக வெளியேற்றுதற்காக, திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட கொள்கையே இனசுத்திகரிப்பு” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முஸ்லிம்களை முழுமையாக அகற்றி தமிழிருக்கு மட்டுமான தமிழீழத்தை உருவாக்கும் எந்தவிதமான ~~திட்டமோ” அல்லது ஒரு ~~கொள்i; கயோ” புலிகளிடம் என்றும் இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. சிங்கள ஆட்சியாளரின் சதியால், முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த, ஐpகாத் என்ற ஆயுத குழு உருவாக்கபட்டது, மதக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உளள் சில முஸ்லிம் வடுP கள், கடைகள் மற்றும் மசூதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடைபெறவிருந்த பெரும் மதக்கலவரத்தை தடுப்பதற்காவே முஸ்லீம்கள் தற்காலிகமாக வெளியேற்றபட்டனர். அந்த சூழ்நிலையில், அவவ்hறானஒருதந்திரோபாயமானமுடிவைஎடுக்கபுலிகள்நிர்ப்பந்திக்கப்பட்டனர்.இந்த சமயோசித முடிவால் பெரும்தொகையான உயிர் மற்றும் உடமை சேதங்கள் தவிர்கக்பட்டன என்பதை அறிவாளிகள மட்டுமே உணர்வார்கள்.
“இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உளள் சில முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடைபெறவிருந்த பெரும் மதக்கலவரத்தை தடுப்பதற்காவே முஸ்லீம்கள் தற்காலிகமாக வெளியேற்றபட்டனர். அந்த சூழ்நிலையில், அவவ்வாறான ஒரு தந்திரோபாயமானமுடிவைஎடுக்கபுலிகள்நிர்ப்பந்திக்கப்பட்டனர்.இந்த சமயோசித முடிவால் பெரும்தொகையான உயிர் மற்றும் உடமை சேதங்கள் தவிர்கக்பட்டன என்பதை அறிவாளிகள மட்டுமே உணர்வார்கள்” என்று ஒட்டு மொத்தமாக 60,000 அதிகமான முஸ்லிம்கள் 48 மணித்தியால அவகாசத்தில் வெளியேற்றிய அப்பட்டமான இனச் சுத்திகரிப்புக்கு சப்புக்கட்டுக் கட்டுகிறார் அம்மணி மனோன்மணி. ஒரு விவாதத்துக்கு “முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை” அடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் ஏன் ஒட்டுமொத்த அப்பாவி முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும். ஒரு சிலர் செய்த தவறுக்காக ஏன் முழு முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்?
டாக்டர் ஞான சங்கரலிங்கம் தனது கடடு; ரையில் சரியாக சுட்டிக்காட்டியபடி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவோ அல்லது பயன்படுத்தவோ புலிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவை யுத்த நிறுத்தத்தின்போது திரும்பி வந்த முஸ்லிம் உரிமையாளர்களிடம் புலிகளால் பாதுகாப்பாக திருப்பி கையளிக்கபட்;டன.
13 ஏப்ரல் 2002 அன்று, தமிழ்த் தேசியத் தலைவர் திரு பிரபாகரன் தலைமையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்த சந்திப்பு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திரு ரவூஃப் ஹக்கீம், திரு அதாவுல்லா, திரு உத்துமலேபே, திரு மொஹிதீன் அப்துல் கேடர், திரு பஸீர் செகு தாவூத், திரு மசூர் நூர்தீன் மற்றும் திரு மசூர் மௌலானா ஆகியோர் கலநது; கொண்டனர்.
புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைத் தலைவர் திரு சு.ப தமிழ்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மாவட்டத் தளபதிகள் ஆகியோர் கலநது; கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் சார்பில் திரு அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், ~~கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக நான் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட வேண்டும். அவர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் ” என்று குறிப்பிடது மட்டுமல்லமல், வடக்கில் முஸ்லிம்கள் தங்கள் வடுP களுக்கு திரும்பலாம் என்று உறுதியளித்தனர்.
இது மட்டுமன்றி, ~~தமிழ் தாயகமும் வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களும் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது” எனறு; ம் அவர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் தலைவர் திரு ஹக்கீம், முஸ்லீம் மக்கள் புலிகளை மன்னிக்க தயாராக இருப்பதாக் கூறினார்.
இது புலிகள் எந்த விதத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும், அவர்களின் பெருந்தனi; மயையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், தனது சொந்த சுயநல காரணங்களுக்காக பழைய காயங்களை கிளறி, தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே மீண்டும் வெறுப்பைத் தூண்டுவது திரு சுமந்திரனின் கடைகெட்ட செயற்பாடு அல்லவா?
திருசுமந்திரனுக்குசரவ்தேசசட்டத்தைப்பற்றியஇம்மியளவுஅறிவுஇருந்திருந்தால்கூட, 1990இல் இடம்பெற்ற முஸ்லிம் வெளியேற்றம் எந்த வகையிலும் ~~இன சுத்திகரிப்பு” என்ற வரையறையில் அடங்காது என்பதை அவர் உணர்ந்திருப்பார.; மேலும் முஸ்லிம் தலைவர்கள் கூட நடந்தவற்றை மறந்து முனN; னற முடிவுசெய்துளள் போதும், திரு சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக, அவர்களை தவறாக வழிநடத்த முயல்வது மிகவும் அருவருப்பானது.
டிசம்பர் 2015 இல் திரு. சுமந்திரன்; ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, ~~இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தில் அரசபடைகள் சர்வதேசஅளவில்ஏற்றுக்கொளள்ப்பட்டவரையறைகளின்படியேநடந்துகொண்டனஎன்றும் அங்கு தமிழ் இனப்படுகொலை நடகக் வில்லை” என்றும் தெரிவித்ததாக டாக்டர் எஸ். ஐ. கீதபொனக் லன் ஊழடழஅடிழவநடநபசயிh பத்திரிகையில் எழுதியுள்ளார்.
இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலைதான் என்பதை முதல்முதலாக, டிசம்பர் 1997; இல் லண்டனில் இயங்கும் தமிழர் தகவல் மையம் (வுஐஊ) பிரகடனம் செய்திருந்தது. னுச டுரவண ழுநவவந எனற் Nஐர்மன் நாட்டைச் சேரந் ;த, தற்போது ளுழுயுளு ருniஎநசளவைல ழக டுழனெழn இல் விரிவுரையாற்றும், பிரபல சட்ட வலலு; னர்; மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையிலேயே தமிழர்; தகவல் மையம் “வுhந ஐவெநசயெவழையெட ஊசiஅந ழக புநழெஉனைந: வுhந உயளந ழக வாந வுயஅடை Pநழிடந in ளுசi டுயமெய” என்ற இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமின்றி 2009க்கு பின்னர் Pசழகநளளழச குசயnஉளை யு டீழலடநஇ Pசழகநளளழச சுயஅர ஆயniஎயnயெnஇ Pசழகநளளழச ஆ ளுழசயெசயதயஇ டீசரஉந குநinஇ டுநநசுhயைnழெnஇனுநசைனசநஆஉஊழnநெடடபோன்றஉலகின்தலைசிறந்தசரவ்தேசசட்ட வலலு; னர்களின் கிடைத்த ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து, தமது ஆய்வறிக்கைகள் மூலம் இது இனப்படுnகொலை தான் என உறுதியா தெரிவித்துளள் hர்கள்.
இது மட்டுமன்றி, Nஐர்மனியில் நடைபெற்ற இலங்கையின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Pநசஅயநெவெ Pநழிடந’ள வுசiடிரயெட) பெரும் புகழ்வாயந்த பன்னிரு நீதிபதிகள் கொண்ட குழு, ஆதாரங்களையும் சாட்சிகளையும் பலநாட்களாக கேடடு; ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்று ஐயம்தெளிவுறதீர்ப்புவழங்கியுள்ளனர்.இந்ததீர்ப்பாயம்சரவ்தேசஉரிமைகள்மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு உதவியுடன் நடத்தபடுகிறது. இவ் அமைப்பு 1979 இல் இத்தாலியில்உருவாக்கபட்டது.இதில்ஐந்துநோபல்பரிசுபெற்றஅறிஞரக்ள்உட்பட31நாட்டு சமூக தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பு வியட்னாம் மீதான தீர்ப்பாயம்(1966- 67)மற்றும்இலத்தீன்அமெரிக்காசரவ்hதிகாரம்(1974-1976)போன்றவிடயங்களை கையாண்டுள்ளது.
இவை தொடர்பாக திரு சுமந்திரன் அறியவில்லை போலும். இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைக்கான போதிய ஆதாரங்களுடன் வணபிதா இராயப்பு யோசப்பு ஆண்டகை ளுவநிhநn சுயிp என்ற அமெரிக்க தூதருக்கு புரியவைத்தார். அதனைக்கூட திரு சுமந்திரனுக்கு அறியவிலi; லயா?
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று முனபு; வாதிட்டு வநத் திரு சுமந்திரன், தற்போது, சற்று நழுவி, தற்போது ~~இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேசத்திடம் உறுதிப்படுத்த எம்மிடம் இன்று போதிய சாட்சிகள் இல்லை எனவே எதிர்காலத்தில் அதை நிரூபிக்கும் வரை அதை இனப்படுகொலை என்று கூறக்கூடாது” என்று புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கதைவிட்டு வருகிறார். வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்த போது தான் எதிர்த்ததற்கான காரணம், அந்த கோரிக்கையை சரவ்தேசநீதிமன்றம்அல்லதுயு.என்.எச்.ஆர்.சிநிராகரிபப்தைதான்;விரும்பவில்லைஎன்பதுதான் எனக் கூறிவருகிறார்.
செப்டம்பர் 2015 இல் ஜெனீவாவில் திரு லதன் சுந்தரலிங்கம் இவரை பேட்டி கண்டபோது, திரு சுமந்திரன் வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒரு ~முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும் கூறினார். முனன் hள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஆலோசனையை எதிர்த்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இனப்படுகொலை விசாரணைக்கான கதவை மூடிவிட்டதாக மேலும் தெரிவித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னைவிட சட்டத்துறையில் எத்தனைபடி சிறந்தவர் என்பதைக்கூட திரு சுமந்திரனின் மறந்துவிட்டார்.
னுயுN தொலைக்காட்சி நேர்காணலில் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, திரு சுமந்திரன், இலங்கையில்நடந்தபோரக்குற்றங்கள்தொடர்பானசரவ்தேசவிசாரணைமுழுமையாக
நிறைவடைந்துளள்தாகவும்,16நவம்பர்2015அன்றுஜெனீவாவில்வெளியிடட்251பக்க அறிக்கை ஒரு முழுமையான மற்றும் விரிவான ஆவணமாகும் என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்தார். முதலாவதாக, இந்த அறிக்கை முழுமையயானது அல்ல என்பதை திரு சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது பெப்ரவரி 2002 முதல் நவம்பர் 2011 வரைமட்டுமானவிடயங்களையேஉள்ளடகக்pயுள்ளது.இரண்டாவதாக,இவர்கூறுவதுபோல இந்த அறிக்கையானது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்ற போதிலும், நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. இது போலவே, ஐ.நா. மனித உரிமை சபையின் முனன் hள்; ஆணையாளர், இளவரசர் சாயிட் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவரும் நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று பதிலளித்ததாக சொல்வது முற்றிலும்; பொய்யானது. இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதற்கான பதிவுகள் எங்கும இலi;; ல.
அதே நேர்காணலில், திரு சுமந்திரன், தான் தமிழர்களை ஆதரிக்கும் பல சட்ட நிபுணர்களுடன் பேசியதாகவும், ~~அவர்கள் அனைவரும்” இனப்படுகொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவுறுத்தினர் என்றும் கூறினார். ஆனால் எந்தவொரு நிபுணரையும் அவரால் பெயர் குறிப்பிட முடியவில்லை என்பது அவரது கூற்றில் எநத் உண்மைத்தனi; மயும் இல்லை என்பதையே காட்டுகிறது. அவரது நேர்மையற்ற தன்மையையும், தமிழ் சமூகத்தை முட்டாளாக்கும் திறனையும் நிரூபிக்க இந்த உண்மைகள் போதுமானவை.
விடுதலைப்புலிகள்போர்ககு;ற்றங்களைச்செய்ததைஒப்புக்கொள்ளத்தயாராகஇருப்பதாக 2019 ஜனவரியில் திரு சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ~~இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள்இரண்டும்போரக்;குற்றங்களைச்செய்ததாகஅனைத்துசரவ்தேச அறிக்கைகளும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன” என்றும் அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஆனால், ஐ.நா.வின் ழுஐளுடு அறிகi; கயில்; ~~இலங்கை அரசபடைகளால் தமிழ் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் மிகக்கொடுரமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படடு; வருவதனை இந்த விசாரணை உறுதிப்படுத்தியிருப்பது மிகவும் வருத்தமானது. அத்துடன் பாலியல் தொடர்ந்து வருவது மிகவும் அதிர்ச்சி தருகிறது. விடுதலைப்புலிகள் பாலியல் சித்திரவதைகளில் ஈடுபட்டதுக்கான எந்தவிதமான தகவலும் எமக்கு கிடைகக் வில்லை” என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தான் நன்கு அறிந்திருப்பதாக கூறிவரும் திரு சுமந்திரன், மேலே உள்ள முக்கிய தகவலை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவருவது அவர் தனது சொந்த தமிழ் சமூகத்திற்கே செய்யும் துரோகம் அல்லமல் வேறு எக்கவாக முடியும்.
திரு சுமந்திரன் தன்னை மீண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவரோ அல்லது தனது சொந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவரோ இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்;. ஒரு தலைவராக அல்லது மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கான மிக அடிப்படையானதகமை,தனதுசொந்தகருத்துகக்ளைஒதுக்கிவைத்து, தன்னையோதான் சாரந்;த கடச்pயையோ நம்பி வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதே ஆகும்.
எதுஎப்படிஇருப்பினும்திருசுமந்திரன்தனக்குவாக்களித்தமக்களின்கருத்துகக்ளைபற்றி எள்ளவவு கூட கவலைப்படாமல், தனது தவறான சொந்த கருத்துகக் ளை மட்டுமே தெரிவித்து வருவதுடன், அதனை மக்களிடம் திணிக்க முற்படுவதும் சகிக்க முடியாதது.
அம்மணி மனோன்மணி மனம் போன போக்கில் மிகவும் கீழ்த்தரமான முறையில் சுமந்திரன் மீது சேறு பூசுகிறார். கேள்வி என்னவென்றால் சுமந்திரன் ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதி என்றால் – வாணிக வழக்குகள் மட்டும் பேசும் அப்புக்காத்து என்றால் அவரைப்பற்றி நீட்டி முழக்கி ஏன் 10 பக்கக் கட்டுரை எழுத வேண்டும்? ஏன் அவரைப் பார்த்துச் சவால் விட வேண்டும்? ஏன் நிலாவைப் பார்த்து குரைக்கும் குக்கல் போல குரைக்க வேண்டும்? அவரை ஓரங்கட்டிவிட்டு அவரைக் கடந்து போவதுதானே? அவரைத் தேர்தலில் தோற்கடிப்பதுதானே?
2010 இல் சுமந்திரன் ததேகூ இன் தேசியப் பட்டியல் நா.உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, அவர் பின்கதவால் அரசியலுக்கு வந்தவர், மக்களால் தெரிவு செய்யப்படாதவர் என அம்மணி மனோன்மணி போன்றோர் நெஞ்சில் அடித்து குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு அழுதார்கள். அவர்களது வாயை அடைக்கவே சுமந்திரன் 2015 இல் நடந்த தேர்தலில் போட்டி போட்டு 58,044 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இன்னும் 47 நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அம்மணி மனோன்மணிக்கு தயிரியம் இருந்தால் சுமந்திரனைத் தோற்கடித்துக் காட்ட வேண்டும். அதைவிடுத்து அவரைப் பார்த்து குரைப்பது நிலாவைப் பார்த்துக் குரைக்கும் குக்கலுக்கு சமமாகும்!
மிக சமீபத்தில், 08 மே 2020 அன்று, திரு சுமந்திரன், முனன் hள் ஊடக இயக்குநராக இருந்த திருசமரவிக்ரமாவுடனானசிங்களபேட்டியில்கூறியகருத்துகக்ளால்அவரதுசொந்தக் கடச்pயினர் உட்பட தமிழ் அரசியல் வட்டாரம் முழுவதும் கொதிப்படைந்துளள்து யாவரும் அறிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்து அவர் அப்பட்டமாக பொய் சொன்னார், மேலும் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைபடுத்தினார்;. மேலும் வடகிழக்கு முழுவதும் தமிழர்களிடையே பரவலான கோபத்தையும் சறீ ;றத்தையும் தூண்டிய இலங்கையின்சிங்கக்கொடிமற்றும்தேசியகீதத்தைதான்ஏற்றுக்கொளக்pறேன்என்று
கூறியதானது அவரது சொந்தக் கட்சியில் உளள் சக சடட் மன்ற உறுப்பினர்களிடமிருந்து கூட விமர்சனங்கள் ஏற்பட காரணமாகியது.
இதுபோலவே,2015ஆம்ஆண்டில்அவர்சண்டேலீடரில்ஆங்கிலத்தில்தனதுகடச்pக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் இல்லை என்றும் அவர்களின் சித்தாந்தத்திற்கு உடன்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் தமது கட்சி ~~பயங்கரவாதத்திற்கு” ஆதரவளித்தில்லை என்று தெரிவிததன் மூலம்; விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற கருத்தை மறைமுகமாக வழங்கியிருந்தார். திரு சுமந்திரன் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டதாக காட்டிக்கொண்டு, ~~புலி ஆதரவு புலம்பெயர்ந்தோருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியது புலம்பெயர்ந்த தமிழரை கடுமையாக புண்படுத்தியது.
திரு சுமந்திரானுககு; கடுமையான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிடட்hர். நான் சுமந்திரனின் சிங்கள் நேர்காணலை முழுமையாக பாரக்;கவில்லைஎனினும்,~~இதுஅவரதுதனிப்பட்டகருத்துதமிழ்தேசியகூட்டணியின் அல்லது இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடாக கருதப்படக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருநத் hர்.
மேலும், திரு சம்பந்தனின் சொந்தக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூத்த உறுப்பினர்கள்,பிறதமிழ்கடச்pகளின்தலைவர்கள்திருசுமந்திரனைப்போலல்லாமல்,தமிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான காரணங்களுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டவர்கள். அவர்கள் திரு சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துகக்ளுக்கு எதிராக தங்கள் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கும்திருசுமந்திரனின்கருத்துகக்ள்அவரதுசொந்தகருத்தாககருதிவிட்டுவிடகூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தமிழரசுகடச்pதலைவர்திருமாவைசேனதிராஜா ~~புலிகளின்ஆயுதப்போராட்டத்தைதன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது”என்றுதிருசுமந்திரன்கூறியகருத்துகக்ளைதன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கோபத்துடன் தெரிவித்தார்.
சக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரபதம் சரவணபவன்,
~~மனிதகுலத்திற்கு எதிரான செயல்களில் பங்கேற்கவோ அல்லது ஈழப்போராட்டத்தை கேலி செய்யவோ ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுகட்சியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறினார். அவர் திரு சம்பந்தனிடம் திரு சுமந்திரனை அவரது பதவியில் இருந்து நகீ ;க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணியும், புகழ்பெற்ற வழக்கறிஞரும் இலங்கை தமிழரசுகடச்pயின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான திரு கே.வி. தவரசா கூறுகையில், ~~திரு சுமந்திரனுக்கு ஆயுதப் போராட்டத்தை கொச்சைபடுத்த அதிகாரம் இல்லை. திரு சுமந்திரன் அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கி தமிழ் மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது” என மேலும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு முனன் hள் சட்டமன்ற உறுப்பினரான திரு சார்லஸ் நிர்மலநாதன் திரு சம்பந்தனிடம் ~~சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிலையிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்க அனுமதிக்க கூடாது” என கேடடு; க்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) தலைவர் திரு செல்வம் அடைகலநாதன், ~~திரு சுமந்திரனின் கருத்துக்கள் முற்றிலும் மன்னிக்க முடியாதவைஇ முழு ஆயுத தமிழ் போராட்டமும் தவறானது என்று சொல்வது முற்றிலும் மன்னிக்க முடியாதது” என்றார்.
மற்றொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் (Pடுழுவுநு) தலைவருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் ~~திரு சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார”; என்றார.;
மட்டக்களப்பைச் சேர்ந்த முனன் hள் தமிழ்த் கட்சி எம்.பி.யான திரு ஞானமுத்து சிறினேசன், ~~திரு சுமந்திரனின் கருத்துகக் ளுக்கு தீர்வு காணும்; பொறுப்பான நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வலியுறுத்தினார். அவர்களின் ஊடக செய்தித் தொடர்பாளரான திரு சுமந்திரனின் கருத்துக்களுககு; தமிழ்த் தேசியக் கட்சி பொறுப்பு, சிங்கள பேரினவாதிகளைமகிழ்விப்பதற்கானசுமந்திரன்தெரிவித்தகருத்துகக்ளுக்காகஅவர் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
முனன்hள்தமிழரசுகடச்pஇளைஞர்பிரிவுதலைவரும்,தமிழ்தேசியவாழ்வுரிமைஇயக்கத்தின் தற்போதைய தலைவருமான திரு வி. சிவகரன் கூறுகையில், ~~திரு சுமந்திரன், வடக்கில் ஒரு கதையையும், தெற்கில் மற்றொரு கதையையும், தமிழில் ஒரு கதையையும், சிங்கள மொழியில் மற்றொருகதையையும்சொல்லிஅரசியலைவணிகமயமாகக்pயுள்ளார்”எனகூறினார்அவர் மேலும் ~~அவ்வப்போது சந்தர்ப்பவாதிகள் தமிழ் தரப்பில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டணியைவிட்டு பலர் விலகி செல்ல சுமந்திரனே காரணமாக இருந்துள்ளார். மக்களுக்காககடச்pயா?அல்லதுகடச்pக்காகமக்களா?என்பதுதொடர்பில்தமிழ்தேசிய கூட்டணி உறுதியான நிலை எடுக்கவேண்டிய காலம் வந்து விட்டது.
சட்டத்தரணிமற்றும்தமிழரசுகடச்pஇளைஞர்பிரிவின்துணைத்தலைவரானஎஸ்.தினேசன்,
~~வடக்கு மற்றும் கிழக்கில் உளள் தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணி பெற்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செய்தித் தொடர்பாளர், இதுபோன்ற கருத்துக்களைவெளியிடுவதுஒருபோதும்ஏற்றுக்கொள்ளப்படாது. இதுபோன்றகருத்துகக்ளை நான் முழுமையாக கண்டிக்கிறேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முனன் hள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு டி. ரவிகரன்
~~தமிழ் மக்கள் சுமந்திரனின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது விடுதலைப்போராட்டத்தையும் அதில் பங்கு பற்றி மடிந்த மற்றும் அங்கவீனமானவர்களையும் ஏன் தலைவர் பிரபாகரனைக்கூட அவமதிக்கும் செயலாகும்” என கூறினார்.
அவர் மேலும் ~~தமிழ் தலைவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து தமிழ் தலைவர்கள் பல வழிகளில் போராடினர். தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அகிம்சை வழிமுறைகளால் தீர்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்க தொடங்கியதையடுத்து புலிகள்இயக்கம்உருவாகக்ப்பட்டது.விடுதலைப்புலிகள்இயக்கத்தைஅனைத்துதமிழ் மக்களும் ஏற்றுக் கொண்ட நிலைமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவ உதவியது எனவே ஆயுதப் போராட்டத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையோ யாராவது இழிவுபடுத்தும்போது தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொளள் மாட்டார்கள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
சிறீசார்பு டெலோவின் பொதுச்செயலாளர் திரு பரராஜசிங்கம் உதயராசா, திரு சுமந்திரன் முழு ஆயுதப் போராட்டத்தையும் நிராகரித்த கருத்துக்களை” கண்டித்ததுடன், ~~திரு சுமந்திரனின் கருத்துக்களுகக்hகதமிழ்த்தேசியக்கூட்டமைப்புஅவர்மீதுநடவடிகi;கஎடுக்குமா?”என்று கேடடு; ள்ளார்.
~~புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத வழிமுறைகளை நிராகரித்த, திரு சுமந்திரனின் கருத்துக்களால் நான் ஆச்சரியப்பட்டேன்” என வடக்கு மாகாணத்தின் முனன் hள் முதல்வர் தலைமைநீதிபதிசிவிவிக்னேஸ்வரன்கூறினார்.~~தம்பிபிரபாகரனால்உருவாகக்ப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்; எம்.பி.யாக அவர் எப்படி இருக்க முடியும்? என்னுடைய முன்னாள் மாணவர் என்ற முறையில், அவரது கருத்துக்கள் எனக்கு பெரும் அவமானத்தைத்
தருகின்றன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் நன்கு அறிந்ததே” எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் ~~தமிழர்களுக்கு சுயாதீனமான ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான அபிலாசைகளுடன்உருவாகக்ப்பட்டதமிழ்த்தேசியக்கூட்டமைப்புஉறுதியற்றதன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது. திரு சுமந்திரனுக்கு கட்சியைச் சுற்றியுள்ள வரலாறு தெரியாது! அல்லது அவர் தெரியாது என்று பாசாங்கு செய்கிறாரா? அவர் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்படட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். திரு சுமந்திரன் ஒரு ஊழியரைப் போல நடத்தப்படுவதில் பெருமிதம் கொள்ளலாம், ஆனால் தமிழர்கள் சார்பாக பேசும்போது அவருக்கு அவவ் hறு செய்ய அவருக்கு உரிமை இல்லை. கொழும்பில் வசதியாக வாழ்ந்தபின், தமிழ் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதற்காகவடககு; மற்றும்கிழக்குநோகக்pதிரும்புவதற்குஅவருக்குஎந்தஉரிமையும் இல்லை” என தெரிவித்தார்.
நீதியரசர் மேலும் கூறுகையில், ~~தமிழ் மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கேடடு; அவர்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பது முக்கியம். இல்லையென்றால், அவர் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது சிங்கள மக்களின் தேவைகளை நிவர்த்திசெய்யும்கட்சியில்இணைந்துபோடடி;யிடவேண்டும்.நாங்கள்எமதுவிடுதலைப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிங்கள மக்களுக்கு எங்கள் தேவைகளை உணர்த்தவேண்டும் தம்பி பிரபாகரன் ஆயுதமேந்தி பேராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப்புரிந்துகொள்ளும்பலசிங்களமக்கள்உளள்னர்.தெற்கில்சிங்கள தலைவர்கள் போராட்டங்கள் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான தேவை பற்றி பேசுகிறார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும், இதுவரை செய்த தியாகங்களையும் குறைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் அகற்ற வேண்டும். சிங்கள மொழியில் என்னிடம் ( விக்னேஸ்வரன்) கேள்விகேடக்ப்பட்டிருந்தால்,பிரபாகரனின்போராட்டம்சிங்களஅரசியல்வாதிகளால்ஏற்பட்டது என்பதை நான் தெளிவாகக் கூறியிருப்பேன்” என தொடர்ந்தார்.
~~சில நாட்களுக்கு முன்பு ஒரு சிங்கள நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் தமது கடச் p ஆயுதபேராட்டத்தை எப்போதும் குறைகூறியே வந்துளள் து என்றும் தான் இலங்கை கொடியை ஏற்று சிங்களத்தில தேசிய கீதம் பாட தாயராக உளN; ளன்” என தெரிவித்திருக்கிறார் என தமிழ் தேசிய மக்கள் முனன் ணி தனது ட்வீட்டரில் பதிவுசெய்திருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முனன் ணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ~~திரு சுமந்திரன் தமிழ் தேசியவாதத்தை மறந்துவிட்டார். அதனால்தான் தமிழ் போராட்டத்திற்கான ஆயுதபோராட்டத்தைஒருபோதும்ஏற்றுக்கொளள்வில்லை”என்றுஅவர்வலியுறுத்தியுள்ளார். ~~அவர் இலங்கை சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எங்கள் வலி பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 11 ஆண்டுகளாக அவர்களின் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் கட்சியின் அடிப்படை அபிலாசைகளிலிருந்து விலகிச் செல்கின்றன என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். திரு மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை உள்நாட்டுப் போரில் அவர்கள் வகித்த பங்கிற்கு திரு சுமந்திரன் பாராட்டியுள்ளார் ” என கூறினார்.
முனன்hள்புலிகளைஉறுப்பினராககொண்டுள்ளகடச்pவெளியிடடு;ள்ளஅறிக்கையில் சுமந்திரனை கடுமையாக சாடியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் வழங்கிவரும் ஆதரவை விலக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்தும் உள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்செய்தித்தொடர்பாளரைக்கண்டித்ததுளள்ன,~~திருசுமந்திரன் கொழும்புக்கு விசுவாசமானவர், கொழும்பை விரும்புகிறார். அவர் தமிழ் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. சிங்கள மக்கள் அவரை சேர் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஒத்த நபராகவே பாரக் ;கிறார்கள் என்ற நம்பிகi; கயின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பைப் பாதுகாகக் அவர் பணியாற்றுகிறார்” என்று தெரிவித்தன.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது 715 வது நாளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ~~சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை தமிழ் அரசியலில் இருந்துநீக்கியபின்னர்தமிழர்களுக்குமுதலில்சுதந்திரம்கிடைககு;ம்.”என்றுஎழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
உலகெங்கிலும் உளள் புலம்பெயர் தமிழர்களை திரு சுமந்திரன் அவர்களை ~~புலம்பெயர் புலி;கள்” என்று குறிப்பிடுவது மிகவும் புண்படுத்தக்கூடியது மற்றும் மன்னிக்க முடியாதது, இது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் குறித்து இலங்கை உளவுத்துறையின் அதே கருத்தை அவர் பகிரந் ;து கொள்கிறார் என்ற உண்மையை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இது போலவே பிப்ரவரி 2017 இல் தன்னை கொலை செய்யும் முயற்சிக்கான திட்டமிடல் வெளிநாட்டில் நடந்துளள் து எனறு; ஒரு போலியான குற்றச்சாட்டையும் அவர் புலம் பெயர் தமிழ் மக்கள் மீது சுமத்தியிருந்தார். புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இவ்வாறு புலி முத்திரை குத்துவதானது, அவர்கள்இலங்கைதிரும்பும்போதுகைதுசெய்யப்டடு;சித்திரவதைக்குஉளள்hவதற்கு வழிகோலிஉளள்து.;ளுவுகுபாதுகாப்பைபெறுவதற்காகதிருசுமந்திரனால்அரங்கேற்றப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி நாடகம் தான் இந்த கொலைமுயற்சி எனற் பதற்கான நம்பகமான தகவல்கள் இப்போதுவெளிச்சத்திற்குவந்துளள்ன.இந்தசதியில்பலிக்கடாவாகக்ப்படட்,யப்பாவியான5 முனன் hள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, இன்னும் சிறையில் சித்திரவதை அனுபவித்துவருவதறக்hனமுழுப்பொறுப்பம்திருசுமந்திரன்ஏற்கவேண்டும்.இந்த5முன்னாள் புலி உறுப்பினர்களை மட்டுமல்லாமல் இலங்கைக்கு திரும்பியதும் கடத்தப்பட்டு, தடுத்து வைகக்ப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் சித்திரவதை செயய் ப்படுவதற்கும் இவரே உடந்தையாகிறார்.
சுருக்கமாக சொல்வதானால், திரு சுமந்திரன் எப்போதுமே தனக்கும் அவரது தமிழ்த் தேசியக்கட்சிக்கும் வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையானது. தனது சமீபத்திய நேர்காணலின் மூலம்,ஏற்கனவேஇழப்பின்வேதனையால்பாதிக்கப்பட்டு,நீதிஇல்லாமல்விடப்படடி;ருக்கும் தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத காயத்தையும் வலியையும் அவர் உருவாக்கியுள்ளார்.
தனதுசொந்தகருத்தைவெளிப்படுத்தும்சுதந்திரம்தமிழர்களால்ஏற்றுக்கொளள்ப்பட்டாலும், அவரும்அவரதுகடச்pயும்பிரதிநிதித்துவப்படுத்தும்தமிழ்மக்களின்கருத்துகக்ளைமதிக்கத் தவறிவிட்டார்.தனதுசொந்தகருத்துகக்ளைஒதுக்கிவைகக்இயலாமையைநிரூபிப்பதன் மூலம், அவர் தனது சொந்த மக்களை ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லைஎன்பதைநிரூபித்துளள்hர்.
தனது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் கருத்துக்களையும் விற்கும் ஒரு தளமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப்பயனப்டுத்தஅவர்அனுமதிக்கப்படக்கூடாது.சுயேட்சையாகநிற்கவோ அல்லதுதனதுசொந்தக்கருத்துகக்ள்அடிப்படையில்தனதுசொந்தக்கடச்pயை உருவாக்கவோ அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழர்களின் ஆணையை அவர் மதிக்க முடியாததால், அவர் உடனடியாக தனது பதவியை துறநது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டும்.
அவரிடம் சுயகௌரவம் கொஞ்சமானது எஞ்சியிருநடதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை நீக்குவதற்கு முனபு; அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறினால,; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமக்களின்ஆணைப்படிசெயல்படவேண்டும்,அவரைகடச்pயைவிட்டுநீக்க வேண்டும் அல்லது தமிழர்களிடமிருந்து அனைத்து ஆதரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிடும்.
கருத்துக்களேதுமில்லை