இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் நேற்றைய தினம் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2042 பேரில் 1678 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
ஏனையவர்களில் 353 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் இந்த நோய்த் தொற்று சந்தேகத்தில் 40 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை