வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று
நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.
குறிப்பாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது தொடர்பாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்தது. எனினும் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
இதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் இன்று ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை