இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஆதரவு
இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்திக்காக பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மனிதாபிமான மற்றும் சுகாதார விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பகிரப்பட்ட ஜனநாயக மரபுகள், மனித உரிமைகளுக்கான மதிப்பு, மக்களின் நீண்டகால ஸ்திரத்தன்மை, செழிப்புக்கான நீண்டகால வெளிப்படைத்தன்மையின் முக்கியத்தும் குறித்து இருவரும் பேசியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை