21ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர்: முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி வாழ்த்து
1ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதன் என அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டின் மிக பெறுமதியான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என உலகில் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான விஸ்டன் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முத்தையா முரளிதரன், இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக தன்னை எப்போதும் அர்ப்பணித்து கொண்ட ஒருவர்.
அத்தகைய ஒருவராகிய முரளிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை