பொதுத் தேர்தல் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், இந்த முறை மறுதினம் காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.