ஏழைகளின் ஆட்சியான சஜித் சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்
இலங்கை அரசியல் வரலாற்றில் 30 வருட யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி மட்டக்களப்பில் மலரப்போகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பத்மநாதன் கேசவகுமாரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவுடன் நேரடி கலந்துரையாடலின் போது அவர் எனக்கொரு வாக்குறுதி தந்தார் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் வெற்றி அடையாவிட்டாலும் கூட அவருடைய அமைச்சில் இணைச் செயலாளர் பதவியும் தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 30 வருட யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை இன்று இருக்கின்ற எல்லா கட்சிகளிடமும் கீழ் மட்டத்திற்கான பார்வை இல்லை என்பதை அறிந்து கொண்டதன் பிற்பாடு தான் இதில் இறங்கினேன்.
சஜித் பிரேமதாசாவுடைய எண்ணம் மட்டக்களப்பில் 5 ஆயிரம் வீடுகட்டிக் கொடுப்பது இதை 43 வீதமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனும் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தினார்.
நான் பதவியிலிருந்தாலும் அல்லது சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அது மக்களுக்கு நேரடியாக ஒரு உறுப்பினரின் வரப்பிரசாதம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாத ஒதுக்கீடு தெட்டத்தெளிவாக மட்டக்களப்பு மாவட்ட ஒவ்வொரு குடி மகனுக்கும் சென்றடைவதற்கான ஒரு திட்டம் வைத்திருக்கின்றேன்.
நான் நாடாளுமன்றம் சென்று ஒரு கிழமைக்குள் அதனை வெளியிடுவேன் அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்னுடைய வெற்றியை நிர்ணயிக்க போகின்ற ஏழை எளிய மக்கள் இன்றைக்கு நிழல் போல வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளை அமைத்துகொடுத்தவர் சஜித் பிரேமதாசா இது ஏழைகளின் ஆட்சி மட்டக்களப்பில் மலரப்போகின்றது இதற்கு முக்கிய காரணம் எனது தலைவர் சஜித் பிரேமதாசாவின் வீட்டுத்திட்டம் தான் என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை