ஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போலவே இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் – ஹக்கீம் குற்றச்சாட்டு
இலங்கையில் சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இனவெறியைத் தூண்டுவது அரசியல்வாதிகளின் ஆதரவின்மையை வெளிக்காட்டுவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வாறு இனவெறியைத் தூண்டுவோர் வெறுமனே அவர்களின் இயலாமையைக் காட்டுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னேற்ற அனைத்து சமூகங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு நாட்டில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை